Shbuhakruthu Year – Chaitra Sroutha Vaartha

Categories:

सर्वेभ्य: आहिताग्निभ्य: शुभकृन्नामसौरमाणसंवत्सरपुण्यकाले शुभेस्मिन् सन्दर्भे भार्गवादिपञ्चार्षेयप्रवरान्वित-श्रीवत्ससगोत्र: आपस्तम्बसूत्र: तैत्तिरीयशाखाध्यायी मनिकण्ठशर्मा सभक्तिकान् अनेककोटिनमस्कारान् समर्पयतः

முத்தீயால் வேள்வி செய்யும் இருபிறப்பாளர் அந்தணர்கள் அனைவருக்கும் அடியேன் மணிகண்டன் தம்பதியர்களின் அன்பார்ந்த வணக்கங்கள்!
பகலவன் வருடம் சுபகிருது இனிதே அமைந்து வீடும் நாடும் விண்ணும் மண்ணும் சிறப்புற வாழ்த்தவேண்டும் என்று சேங்காலிபுரத்தில் தோன்றிய வேதியர் கோன் தாள் பணிந்து வேண்டிக்கொள்கிறேன்! காஞ்சி மா முனிவன் கருணையும் செந்தமிழ்செல்வி கயல்விழியாள் கருணையும் இப்போதும் முத்தீயை வணங்கி செந்தழல் ஓம்பும் தீக்கை பெற்ற சான்றோர் கருணையும் எங்கள் மேல் இருக்க வேண்டும் என்று என்னப்பன் நரசிங்கனை நித்தமும் பணிந்திடுவேன்!

After that panchanga patanam for Shubakruthu year was performed. By the graces of MahaPeroyava and all our Ahitagnis, this year should be a very prosperous year peace should prevail in this Universe, and pandemics and diseases should come to an end!

Tamil Panchangam for This Year:

Routemybook - Buy Asal 28-No. Subakirudhu Varusha Suttha Vakkiya Panchangam  [அசல் 28-நெ.சுபகிருது வருஷ சுத்த வாக்கிய பஞ்சாங்கம்] 2022-2023 by Manonmani  Vilas Press Private Limited Online at Lowest Price in India
Pambu Panchangam
Routemybook - Buy Subakirudhu varushathiya Arkadu Ka.Ve.Seetharamayyar  Sarva Muhurtha Panchangam [சுபகிருது வருஷத்திய ஆற்காடு கா.வெ சீதாராமய்யர்  சர்வ முஹூர்த்த பஞ்சாங்கம்] (2022-2023) by ...
Arkadu Panchangam

நவநாயகர் பலன் இராஜா சனி பலன்:

தானியங்கள் நல்ல விளைச்சல் கொடுக்கும். தொழிலாளர்கள் மேன்மையடைவார்கள். இரும்பு சம்பந்தமாக அதிகம் உற்பத்தியாகும். மந்திரி வியாழன் பலன்: பசுக்கள் பால் உற்பத்தி அதிகமாகுள். பசுக்கள் விலையும் அதிகமாகுள். அரசு அதிகாரிகள் திறமையுடன் செயல்படுவார்கள். பணம் பற்றாக்குறை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். சேனாதிபதி புதன் பலன்: இந்த ஆண்டு புதிய ஆராய்ச்சி தொடங்கும். இராணுவத்தில் அதிக இடங்களுக்கு ஆள் சேர்ப்பார்கள். அர்க்காதிபதி புதன் பலன்: இந்த ஆண்டு ஆபரணங்கள் விலை ஏற்றமும் இறக்கமும் காண்பீர்கள். நகைகள் ஏற்றுமதி அதிக வாய்ப்புள்ளது. மேகாதிபதி புதன் பலன்: இந்த ஆண்டு எல்லா இடங்களிலும் பூமியெங்கும் நல்ல மழை பெய்து நல்ல விளைச்சல் உருவாகும். ஏரி, குளம் நிரம்பும். ஸஸ்யாதிபதி சூரிய பலன்: உணவுப் பொருட்கள் விளைச்சல் பெருகும். விலையும் அதிகமாக இருக்கும். ஜவுளிகள், பேப்பர், பருத்தி, விலைகள் அதிகமாக இருக்கும். தான்யாதிபதி சுக்கிர பலன்: தானியங்கள் விலை ஏறும். பழ வகைகள் ஏற்றமும், இறக்கமும் இருக்கும். பாத்திரங்கள் விலை அதிகமாக இருக்கும். இரஸாதிபதி செவ்வாய் பலன்: இனிப்பு வகைகள் எண்ணெய் வகைகள் விலைகள் அதிகமாக இருக்கும். அதிக அளவில் விபத்து ஏற்படும். நீரஸாதிபதி சனி பலன்: வாசனை திரவியங்கள் விலை அதிகமாக இருக்கும். நாட்டு வைத்திய சாமான்கள் விலையும் அதிகமாக இருக்கும்.

மகர சங்கராந்தி பலன்

நாமதேயம் – ராக்ஷசி செண்டாளர்களுக்கு சௌக்கியம். ஜாதி – பிராம்மணர் பிராமணர்களுக்கு சௌக்கியம். அபிஷேகம் – கங்காதீர்த்தம் தெய்வ பக்தி மிகும். சாமரம் – நீலம் ஆரோக்யம். குடை – ரவிப்பியம் ஏமாற்றுபவர்களுக்கு பீடை. வாத்தியம் – மகாபேறி கலைஞானிகளுக்கு பீடை. முகம் – குரோதம் பயம் உண்டாகும். போஜனம் – பாயசம் துர்பிக்ஷம். பாத்திரம் – தாமிரம் தான்யஹானி. புஷ்பம் – சிறுசெண்பகம் புஷ்ப வியாபாரிகளுக்கு சௌக்கியம். கந்தம் – குங்குமம் சிங்கார ஜெனங்களுக்கு பீடை. ஆயுதம் – கட்கம் சூரர்களுக்கு பீடை. ஆபரணம் – வைடூரியம் நவரத்தின வியாபாரிகளுக்கு சுகம். வஸ்த்திரம் – சிகப்பு பயம் உண்டாகும். வாகனம் – புலி காட்டில் உள்ள மிருகங்களுக்கு பீடை. திக்கு – தெற்கு சர்வாதிகளுக்கும், ஸமஸ்த்த சம்பத்து உடையவர்களுக்கு பீடை. கிழமை – சனி தான்யஹானி. காலம் – நடுநிசி திருடர்களுக்கு பீடை. பக்ஷம் – கிருஷ்ண துர்பிக்ஷம். திதி – அஷ்டமி அற்பமழை. நக்ஷத்திரம் – சித்திரை சமம். யோகம் – சுகர்ணம் ஜெனங்களுக்கு சுகம். கரணம் – பாலவம் வியாதி உண்டாகும். லக்னம் – கன்னி செம்படவர்களுக்கு பீடை. நவாம்சம் – கன்னி சுகம். அக்ஷதை – கோதுமை கோதுமை விலை குறையும். தூபம் – அகில் விலை குறையும். குணம் – கோபம் பகை உண்டாகும். பக்ஷணம் – கதலி பலம் – சுகம்.

சுபகிருது வருடத்தில் நாடெங்கும் நல்ல மழை பெய்யும் சுபிட்சமாக விளங்கும் என தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது. நல்ல விளைச்சல் உண்டாகும். கேடு எவருக்கும் வராது மக்கள் சுகமாக வாழ்வர் எனவும் தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டு காலமாக நோய்களின் பிடியில் சிக்கித்தவித்த மக்கள் இந்த ஆண்டு நிம்மதி பெருமூச்சு விடலாம்.

தமிழ் வருடங்கள் 60ல் சுபகிருது 36வது ஆண்டாக அமைந்துள்ளது. சுபகிருது என்பதற்கு நற்செய்கை என்று தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அந்த அளவில் இந்த ஆண்டு பல்வேறு நற்செய்திகளைக் கொண்டுவரும் ஆண்டாக அமையும்.

மங்கலகரமான ‘சுபகிருது புத்தாண்டு, 14.4.22 வியாழக்கிழமை அன்று பிறக்கிறது. குரு வாரத்தில், குரு பகவான் தன் சொந்த வீடான மீன ராசியில் இருக்கும் நேரத்தில் பிறக்கும் இந்தப் புத்தாண்டு பல்வேறு நன்மைகள் தரப்போகிறது.

சுபகிருது வருட வெண்பா பலன்
சுபகிருது புத்தாண்டு குறித்து சித்தர்பெருமான் இடைக்காடரின் வெண்பா கீழ்க்காணும்படி அமைகிறது.

சுபகிருது தன்னிலே சோழதேசம் பாழ்
அவமாமம் விலைகுறையும் சூன்சாம் சுபமாகும்
நாடெங்கும் மாரிமிகும் நல்லவிளை வுண்டாகும்
கேடெங்கு மில்லையதிற் கேள்

வெண்பா பொருள்:

சுபகிருது ஆண்டில் சோழநாட்டிலே சில பொருள்கள் வீணாகிப் பாழாகும். மான்களுக்கு நோய் தாக்கும். மண்பாண்டங்களின் விலை குறையும். மழை நன்கு பெய்து விளைச்சல் உண்டாகும். மழையினால் வேறு எந்த கேடும் இல்லை’ என்கிறது இந்த வெண்பா.

சுகமான ஆண்டு
சுபகிருது வருடத்தில் பிறந்த மனிதன் சௌபாக்கியம், கல்வி, அளவற்ற புண்ணிய கர்மங்களினாலே வெகுகாலம் ஜீவித்திருப்பவனும் பிள்ளைகளும் அதிகம் செல்வமும் உடையனுமாவான்.

சுபகிருது வருடத்தில் நோய்க் கிருமிகள் அதிக அளவில் பரவினாலும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு பாதிப்புகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். இந்த ஆண்டு முழுவதுமே குருபகவான் தன் சொந்த வீடான மீன ராசியிலேயே சஞ்சரிக்கிறார். ஆகவே, கல்வி வளர்ச்சி, பொருளாதாரம், குழந்தைகளின் வளர்ச்சி ஆகியவை நல்ல முறையில் காணப்படும்.

நல்ல மழையால் மகிழ்ச்சி
சுப கிருது ஆண்டின் ராஜா சனிபகவான். மந்திரி குரு பகவான், சேனாதிபதி,அர்க்காததிபதி,மேகாதிபதி புதன் பகவான். தானியாதிபதி சுக்கிரன். ரஸாதிபதி சந்திரன் ஆவார். ராஜா சனியாக இருப்பதால் மழை வளம் பெருகும். உணவுப்பொருட்கள் உற்பத்தி, பணப்பயிர் உற்பத்தி அதிகரிக்கும். அரசின் புதிய சட்டங்களால் மக்களுக்கு பாதிப்பு அதிகரிக்கும். எல்லையில் அந்நியர் ஆதிக்கம் அதிகரிக்கும். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள்.

குற்றங்கள் குறையும்
குரு பகவானின் பார்வையால் உலகத்தில் இருந்துவந்த துன்பங்கள் விலகி, படிப்படியாகக் கஷ்டங்கள் தீரும். கடத்தல் முதலான குற்றத் தொழில்கள் கட்டுப்படுத்தப்படும். அமைச்சராக குரு வருவதால் விவசாயத்திற்கு தேவையான காலத்தில் தேவையான அளவு மழை பொழியும். நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வங்கித் தொழில் சிறப்படையும். மக்கள் சுகத்தோடும் சந்தோஷத்தோடும் இருப்பார்கள்.

புதன் செய்யும் மாயம்
சேனாதிபதி, அர்க்காதிபதி, மேகாதிபதியாக புதன் இருப்பதால் திரைப்படக்கலைஞர்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. அதே நேரத்தில் காற்றின் மூலம் நோய்கள் பரவும். அதனை தீவிரவாதிகள் உபயோகிப்பார்கள். அத்தியாவசிய பொருட்கள் விலை அடிக்கடி ஏறி இறங்கும். கலைஞர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

சனிபகவான்
இந்த ஆண்டு பிறக்கும்போது நீதிமானான சனிபகவான் ஆட்சி பலம் பெற்று அமர்ந்திருப்பதால், உலகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் விரைவாக நடைபெற்று தீர்ப்புகள் வெளியாகும். நம் நாட்டில் கனிமப்பொருள்கள் மூலம் அரசுக்குப் பலகோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். புதிய தங்கச் சுரங்கம் மற்றும் கடல் பகுதியில் அரிய பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்படும்.நம் தேசத்துக்கு வல்லரசு நாடுகளின் ஒத்துழைப்பு அதிகமாகக் காணப்படும்

தென்மேற்குப் பருவமழை வெள்ளம்
ஆனி மாதம் இடி மின்னலுடன் புயல் காற்றும் பெருமழையும் ஏற்படும். நாட்டின் மத்திய பகுதி செழிப்பாக இருக்கும். கடற்கரைப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படும். தென்மேற்குப் பருவமழை சிறப்பாக இருக்கும். கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத் கடற்கரைப்பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்படும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது.
பழ வகைகள், கிழங்கு வகைகள் உற்பத்தி அதிகமாகி விலை குறையும். விவசாயத்தில் புதிய முறைகளை புகுத்தி விளைச்சலினால் அதிக பொருளாதார வளம் பெறுவார்கள். இரும்பு விலை ஏறும். நம் நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் கட்டுக்குள் வரும். மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்களுக்குப் பொன்னான காலம்; அதிகமான ஊதியமும் ஊக்கத்தொகையும் கிடைக்கும். மொத்தத்தில் சுபகிருது ஆண்டு மக்களுக்கு பொன்னான ஆண்டாக இருக்கும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது.

On the occasion of Chaitra Mesha Sankramana, Vishu Punya Kaalam, or Tamil / Malayalam New Year special Vedic chanting was performed in Mathuru Sanskrit Village. A total of 12 vaidikas were invited to chant Aruna Prshnam & Nakthreshti Brahmanam for Universal welfare.